வைரசினால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதால்- எரிப்பதால் ஆபத்தா? மேற்கு வங்காள மாநில அரசாங்கம் அறிக்கை

03 Apr, 2020 | 09:59 PM
image

கொரோனா வைரசினால் உயிரிழந்தவரின் உடல் புதைக்கப்படும் அல்லது  எரிக்கப்படும் பகுதிகளில் இருந்து நோய் தொற்றுவதற்கான வாய்ப்பில்லை  என இந்தியாவின் மேற்குவங்காள அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரச அதிகாரிகளிற்கும் பொதுமக்களிற்கும் விடுத்துள்ள அறிவுறுத்தலில் மம்தா பானர்ஜி அரசாங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினது அறிவுறுத்தல்களை மேற்கோள்காட்டி மாநில அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசினால் இறந்தவரின் உடல் காரணமாக எவருக்கும் தொற்று ஏற்படாது என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபரின் உடல் காரணமாக சுகாதார பணியாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் அயலவர்களிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என  மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உடலை எரிப்பதன் காரணமாக உண்டாகும் புகையினால் எந்த ஆபத்துமில்லை என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இறந்தவரின் உடலை தகனம் செய்வதால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் மேற்குவங்காள அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கும் புதைப்பதற்கும் மக்கள்  எதிர்ப்பினை வெளியிட்டு வரும் நிலையிலேயே மம்தா பானர்ஜி அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52