ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு 11.15 மணியளவில் நாடு திரும்பியுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி ஜப்பானிலுள்ள இலங்கையரின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்த அவர் பல்வேறு முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.

அவருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.