நாடு தழு­விய ரீதியில் மிக நீண்ட தூர சைக்­கி­ளோட்டப் போட்டி எதிர்­வரும் ஜூலை மாதம் 27ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இலங்­கையின் மிக நீண்ட தூர சைக்கிள் ஓட்டப் போட்­டி­யாக பதி­வா­க­வுள்ள இந்தப் போட்­டி­யா­னது ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறு­வ­னத்தின் பூரண அனு­ச­ர­ணை­யுடன் நடை­பெ­று­கி­றது.

இந்தப் போட்­டிகள் குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று நேற்று கொழும்பு சினமண்ட் கிராண்ட் ஹோட்­டலில் நடை­பெற்­றது. இதில் எஸ்.எல்.டி நிறு­வன அதி­கா­ரிகள், தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­களில் சைக்கி­ளோட்டப் போட்­டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜீவன் ஜய­சிங்க மற்றும் முன்னாள் சைக்­கி­ளோட்டசம்­பி­யன்கள் என பலர் கலந்­து­கொண்­டனர்.

ஜூலை மாதம் 27ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள இந்தப் போட்­டி­யா­னது தொடர்ந்து 5 நாட்கள் நடை­பெ­ற­வுள்­ளது. இது கொழும்பில் ஆரம்­ப­மாகி மாத்­தறை வரை சென்று அங்­கி­ருந்து இரத்­தி­ன­புரி வந்தடைந்து,

தொடர்ந்து கண்­டிக்கு சென்று, கண்­டி­யி­லி­ருந்து அனு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை ஊடாக மட்­டக்­க­ளப்பில் போட்டி முடிவு காண்­கி­றது.

இதில் தினமும் வெற்­றி­பெறும் வீரர்­க­ளுக்­கான பரி­சில்­களும் ஒட்­டு­மொத்த போட்­டியின் சம்பியனுக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 10 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.