13 நாட்களில் ஊரடங்கை மீறிய 9734 பேர் கைது : 2179 வாகனங்கள் பறிமுதல்

Published By: Vishnu

02 Apr, 2020 | 07:17 PM
image

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல் படுத்படுத்தப்பட்ட  ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 13 நாட்களுக்குள் 9734  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 2179 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு கால அவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது. 

இவ்வாறு  எட்டு மணித்தியாலம் கால அவகாசம் வழங்கப்பட்டு மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு, கம்பஹா,  களுத்துறை,  கண்டி புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவிக்கும் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் சில பகுதிகள் முற்றகாக முடக்கப்பட்டுள்ளன.

இதன்போது ஊரடங்கு சட்டத்திற்கு புறம்பாக செயற்படுபவர்களை கைது செய்வதாக பொலிஸார் அறிவித்திருந்த போதும்  சிலர் அதனை கருத்திற் கொள்ளாது செயற்பட்டு வருகின்றனர்.இது போன்ற நபர்கள் தொடர்பில் அவதானம்செலுத்தியுள்ள பொலிஸ் தலைமையகம் பல்லாயிரம் பேரை கைது செய்துள்ளது.  இதேவேளை சந்தேக நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய  இன்று வியாழக்கிழமை காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரையான 6 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 268 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 30 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதன்போது வைரஸ் பரவல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளான  கம்பஹா, நீர்க்கொழும்பு, களனி, பாணந்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலே அதிகளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு கடந்துள்ள 13 நாட்களுக்குள் மாத்திரம் 9734 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், கார், முச்சக்கர வண்டி உள்ளிட்ட  2179 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்பதுடன், அதனை வைரஸ்  தொற்று கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னரே கையளிக்கப்படும். இதேவேளை பிரதான வீதிகள் மாத்திரமின்றி கிளைவீதிகளிலும் சோதனனகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள நெருக்கடிநிலைமையை கருத்தில் கொண்டு அணைவரும்தயவு செய்து தங்களது வீடுகளில் இருப்பதுடன்இ நீங்கள் இவ்வாறு செயற்படுவது பெரும் பலவாய்ந்த செயலாக கருத வேண்டாம். இது போன்ற செயற்பாடுகளின் விளைவாலே இன்று எமது நாட்டிலும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது கடினமாகியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04