பழைய முறையிலாவது உள்­ளூ­ராட்சி தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­துங்­கள் : ஐக்­கிய தேசியக் கட்சி

Published By: Robert

22 Jun, 2016 | 09:26 AM
image

புதிய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்­து­வ­தற்கு கடி­ன­மானால் நடை­மு­றை­யி­லுள்ள விகி­தா­சா­ர தேர்தல் முறைப்­ப­டி உட­ன­டி­யாக உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்த வேண்டும்.

தேர்தல் கால­தா­ம­தத்­திற்கு ஐக்­கிய தேசியக் கட்சி பொறுப்பு கிடை­யாது என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அரச தொழில் முயற்சி அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.

தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­வ­தற்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் எந்­த­வொரு தொடர்பும் கிடை­யாது. தேர்­தலை நாளை நடத்­தி­னாலும் போட்­டி­யி­டு­வ­தற்கு நாம் தயா­ரா­கவே உள்ளோம். தேர்­தல்­களை கண்டு துவண்டு விட­மாட்டோம். அதற்கு வெற்­றி­க­ர­மாக முகங்­கொ­டுத்து வெற்­றி­பெ­றுவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பிட்ட கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் கலந்து கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையின் மாபெரும் கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் துரி­த­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இளை­ஞர்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிப்­ப­தற்­காக பல்­வேறு திட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. மேலும் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவை விரி­வுப்­ப­டுத்தி புதிய கட்­ட­ட­மொன்­றையும் நிர்­மா­ணிக்­க­வுள்ளோம். கட்­சியின் அங்­கத்­த­வர்­க­ளுக்­கு இலத்­தி­ர­னியல் அட்­டையை வழங்க திட்­ட­மிட்­டுள்ளோம்.

அத்­துடன் வற்­வரி அதி­க­ரிப்­பினால் மக்கள் எமது ஆட்­சியின் மீது அதி­ருப்­தியில் உள்­ளனர் என கூறப்­ப­டு­கின்­றது. இருந்­த­போ­திலும் வற் வரி­யினை அதி­க­ரிப்­ப­தற்கு நாம் ஒரு­போதும் விரும்­ப­மில்லை. ஆனாலும் முன்­னைய ஆட்­சியின் செயற்­தி­ற­னற்ற பொரு­ளா­தார கொள்­கையின் கார­ண­மாக தற்­போது பல்­வேறு நெருக்­க­டிக்கு நாம் முகங்­கொ­டுக்க நேரிட்­டுள்­ளது. குறித்த வரி அதி­க­ரிப்­புகள் யாவும் தற்­கா­லிக மான­வையாகும். இதற்­கான மாற்­று­வ­ழி­களை கையாள நாம் திட்­ட­மிட்­டுள்ளோம்.

1994 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியின் மொத்த வரு­மா­னத்தில் 23 சத­வீதம் வரி­யி­லி­ருந்து பெறப்­பட்­ட­தாகும். ஆனாலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியின் போது 10 சத­வீ­தமே பெறப்­பட்­டது. வெளி­நாட்­டி­லி­ருந்து வரும் பொருட்­க­ளுக்கும் சூதாட்ட வியா­பா­ரங்­க­ளுக்கும் வரி விலக்­க­ளிக்­கப்­பட்டு பாரிய சலு­கைகள் வழங்­கப்­பட்­டன. இதன்­வி­ளை­வா­கதான் வரி அதி­க­ரிப்­பினை செய்ய வேண்­டி­யுள்­ளது.

அது­மாத்­தி­ர­மின்றி முன்­னைய ஆட்­சியின் போது பெறப்­பட்ட பாரிய கடன்­தொ­கையை செலுத்த வேண்­டி­யுள்­ளது. இதற்­கான தவணை முறையில் வட்டி செலுத்­து­வ­தற்­காக எமது ஆட்­சியில் கடன் பெறப்­பட்­டுள்­ளன. ஆனாலும் வரி அதி­க­ரிப்­பினால் மக்கள் வாழ்க்கை நிலைமை பாதிக்­கப்­பட கூடும். நாம் மக்­களின்

வாழ்க்கை நிலை­மையை ஒழுங்­கு­மு­றை­மைக்கு கொண்­டு­வ­ரவே பல்­வேறு வரி அதி­க­ரிப்­பினை செய்­துள்ளோம்.

ஆனால் குறித்த வரி அதி­க­ரிப்­பினால் மக்­களின் வாழ்க்கை நிலையை முழு­மை­யாக பாதிப்­புற செய்­ய­வில்லை. பல்­வேறு சலு­கை­களை மக்­க­ளுக்கு நாம் வழங்­கி­யுள்ளோம். சம்­பள அதி­க­ரிப்­பனை அரச மற்றும் தனியார் துறை என இரண்டு சாரா­ருக்கும் வழங்­கி­யுள்ளோம். அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­களை குறைத்தோம். இது­போன்று பல்­வேறு சலு­கை­களை வழங்­கு­வ­தற்க திட்­ட­மிட்­டுள்ளோம்.

எனவே எமது ஆட்­சியின் மீது மக்கள் அதி­ருப்தி கொள்­ள­வில்லை. முழு­மை­யான நம்­பிக்­கை­யினை எம்­மீது வைத்­துள்­ளனர். பொரு­ளா­தா­ரத்தை ஸ்திர­மான நிலை­மைக்கு கொண்­டு­வ­ர­வற்கு அனை­வரும் ஏதோ­வொரு வகையில் தியாகம் செய்ய வேண்டும்.

இந்­நி­லையில் மக்கள் எதிர்ப்­புக்கு அஞ்சி தேர்­தலை பிற்­போட முனை­வ­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் மீது குற்றம் சுமத்­து­கின்­றனர். தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­வ­தற்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் எந்­த­வொரு தொடர்பும் கிடை­யாது. அத்­துடன் தேர்­தலை நாளை நடத்­தி­னாலும் போட்­டி­யி­டு­வ­தற்கு நாம் தயா­ரா­கவே உள்ளோம். தேர்­தல்­களை கண்டு துவண்டு விட­மாட்டோம். அதற்கு வெற்­றி­க­ர­மாக முகங்­கொ­டுத்து வெற்­றி­பெ­றுவோம். பாராளுமன்ற தேர்தலின் போது இதனையே கூறினர். ஆனாலும் நாமே பெரும்பான்மையை பெற்றோம்.

எவ்வாறாயினும் புதிய தேர்தல் முறைமைக்காக வேண்டியே தேர்தல் பிற்போடப்படுகின்றது. குறித்த பணிகள் நிறைவடைந்தவுடன் தேர்தல் நடாத்தப்படும். ஆனாலும் புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு கடினமானால் நடைமுறையிலுள்ள விகிதாசாரத்தின்படி உடனடியாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும். காலதாமதத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்பு கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19