ஜனாதிபதி பிரதமரை சந்திக்கிறது கூட்டமைப்பு.!

Published By: Robert

22 Jun, 2016 | 09:22 AM
image

நல்­லி­ணக்க அர­சாங்கம் தமிழ் மக்­க­ளுக்கும் கூட்­ட­மைப்­புக்கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களை விரைவில் நிறை­வேற்­ற­வேண்டும். குறிப்­பாக கால­தா­ம­த­மின்றி மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­ட­வேண்டும் என யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்ட ஜனா­தி­ப­தி­யிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ள­தாக இலங்கை தமி­ழ­ரசுக் கட்சித் தலை­ வரும் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரு­மான மாவை.சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

இந்த வார­ம­ளவில் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி பிர­த­ம­ருக்கும் இடையில் சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

யாழ்ப்­பா­ணத்­திற்­கான ஜனா­தி­ப­தியின் விஜயம் மற்றும் ஆளுநர் அலு­வ­ல­கத்தில் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்புத் தொடர்­பாக கேட்­ட­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இந்­திய அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் அமைக்­கப்­பட்ட துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கு மற்றும் சர்­வ­தேச யோகா தினத்தில் கலந்து கொள்­வ­தா­கவே ஜனா­தி­ப­தியின் விஜயம் அமைந்­தி­ருந்­தது. இதில் அவர் பல அறி­விப்­புக்­களைச் செய்வார் என்­பது நியா­ய­மா­காது. எனினும் வட­மா­காண ஆளுநர் அலு­வ­ல­கத்தில் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்­புக்கு எனக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இச்­சந்­திப்பில் எமது மக்­களின் எதிர்­பார்ப்பு தொடர்­பாக விரி­வாக எடுத்­து­ரைத்­துள்ளேன். குறிப்­பாக வடக்கு கிழக்கு பகு­தி­களில் தமிழ் மக்கள் சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­ப­ட­வேண்டும் என தெரி­வித்தேன். மேலும் நல்­லி­ணக்க அர­சாங்கம் பத­விக்கு வந்து ஒரு வரு­டம் பூர்த்­தி­யா­கப்­போ­கின்­றது.

இது­வ­ரையில் எமக்கும் எமது மக்­க­ளுக்கும் வழங்­கிய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. காணிகள் விடு­விப்பு குறைந்­த­ளவே நடை­பெற்­றுள்­ளது. முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­ட­வில்லை. விடு­விக்­கப்­பட்ட காணிகள் மக்கள் குடி­யி­ருப்­பிற்கு ஏற்ற காணிகள் அல்ல. இந்­நி­லையில் காணிகள் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­ட­வேண்டும். இனியும் இழுத்­த­டிப்­புக்கு இடம் இல்லை. அதனை மக்கள் ஏற்றுக் கொள்­ள­மாட்­டார்கள் என்­பதை ஜனா­தி­ப­திக்கு எடுத்­துக்­கூ­றினேன்.

எமது மக்கள் ஜனா­தி­ப­தியின் வரு­கையை ஆவ­லாக எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்த நிலையில் மக்­க­ளது பிரச்­சினை தொடர்பில் அவர் எதுவும் கூற­வில்லை. இந்­நி­லையில் எமது மக்கள் தமது கோரிக்­கையை முன்­வைத்து போராடப் போவதாக எனக் கூறுகிறார்கள். இதனை மாற்றமுடியாது. அவர்க ளது கோரிக்கை நியாயமானது என்பதையும் அவருக்கு எடுத்துரைத்தேன்.

இதேவேளை, இந்த வாரமளவில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி பிரதமருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04