இழுபறிக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டது 3 ஆவது கொவிட் 19 தொற்றாளரின் சடலம்

Published By: J.G.Stephan

02 Apr, 2020 | 05:13 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)


 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றாவது நபரும் நேற்று இரவு (01.04.2020) உயிரிழந்துள்ளதை அடுத்து அவரது சடலம் இன்று நண்பகல் முல்லேரியா பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது, குறித்த தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவரின் மகன் மற்றும் நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் மட்டும் சடலத்தை பார்வை இடவும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது.

 கொழும்பு மருதானையை சேர்ந்த 73 வயதான, தங்க நகை வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒருவரே நேற்று உயிரிழந்தார்.

அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே, நேற்று கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, அங்கொடை தொற்று நோய்தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவ்வாறு மாற்றப்பட்ட, அவர்  தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்துவிட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.
 
குறித்த தொற்றாளர் நீண்ட காலமாக நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம்,  சிறுநீரக பிரச்சினை தொடர்பில் சிகிச்சைப் பெற்று வந்தவர் என வைத்தியர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம், மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் கொரோனா தொற்றால் இறப்பவர்கள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த சுற்று நிருபத்தின் பிரகாரமும், பிரதேச சட்டவைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் முன்னிலையில் முல்லேரியா பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55