அமெரிக்க போர்க்கப்பலிலிருந்து வெளியேற்றப்படவுள்ள 3,000 கடற்படை வீரர்கள் !

Published By: Vishnu

02 Apr, 2020 | 03:15 PM
image

கொரோனா வைரஸ் பரவியுள்ள விமானங்களை தாங்கியுள்ள அமெரிக்க கப்பலில் சுமார் 3,000 கடற்படை வீரர்கள் வெள்ளிக்கிழமைக்குள் கப்பலிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க கடற்படை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா கடற்பரப்பின் குவாமில் நங்கூரமிடப்பட்டுள்ள அமெரிக் கடற்படைக்கு சொந்தமான 'Theodore Roosevelt'  என்ற கப்பலில் சேவைக்கமர்த்தப்பட்ட 5000 கடற்படை வீரர்களுள் சுமார் 100 க்கும் குறைவானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந் நிலையிலேயே கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் பென்டகன் கூறுகையில், 

எங்களால் அனைத்து கடற்படை வீரர்களையும் கப்பலில் இருந்து அகற்ற முடியாது. எனினும் கப்பலிலிருந்து பெரும்பாலான கடற்படை வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

இதுவரை சுமார் 1,000 பேர் கரைக்கு திரும்பியுள்ளனர். ஓரிரு நாட்களில் அந்த எண்ணிக்கையானது குறைந்தது 2,700 ஆக உயர்வடையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தற்போது கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பு கொண்ட அனைத்து கடற்படை வீரர்களையும் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி கூறியுள்ளார்.

புதன்கிழமை நிலவரப்படி சுமார்  1,300 கடற்படை வீரர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சோதனைகளில் கிட்டத்தட்ட 600 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவர்களின் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Photo Credit : The guardian

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47