மல்வானையில் வறுமையிலுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் அன்பளிப்பு 

02 Apr, 2020 | 12:55 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஊரடங்கு சட்டம் காரணமாக வறுமையாலும் தொழிலின்மையாலும் வேறு காரணங்களாலும் அல்லல்படும் மக்களுக்கு இன மத பேதமின்றி உலர் உணவுப் பொதிகளை உதவியாக வழங்கும் செயற்பாடு மல்வானையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 800 உலர் உணவு பொதிகள் மல்வானை பகுதியில் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் மக்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.

மல்வானை பிரதேசத்தைச்சேந்த தனவந்தர் ஒருவரினாலே இந்த உதவி மேற்கொள்ளப்பட்டது. 

இதேவேளை இப் பிரதேசத்தில் வாழும் ஒருபகுதி மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் அப்பகுதியில் அமைந்திருக்கும் விகாரையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது. 

நாடு தற்போது எதிர்னோக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கம்பஹா மாவட்டத்துக்கான ஊரடங்கு சட்டம் கால வரையறையின்றி அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. 

இப் பிரதேசத்தில் அதிகமான மக்கள் அன்றாடம் கூலி வேலை செய்தும் சுயதொழில் செய்துமே வாழ்ந்து வருகின்றனர். அதனால் இந்த மக்களின் கஷ்டத்தை போக்கவும்  இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேலும் வலுப்பெறச் செய்யும் நோக்கத்திலும் உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியதில் இருந்து மல்வானை பிரதேசத்தில் இருக்கும் தனவந்தர்களாலும் நலன்புரி சங்கங்களாலும் வறுமை நிலையில் இருக்கும் குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06