பிரபல ஊடகவியலாளரிடம் ஒரு மணி நேரம் விசாரணை ; சாட்சியமும் பதிவு

Published By: Robert

22 Jun, 2016 | 09:18 AM
image

ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேராவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ணவின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் நவாஸ் உள்ளிட்ட குழுவினரால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் நேற்றைய தினம் பிரபல சிங்கள பத்திரிகையொன்றின் அலுவலக பிரபல செய்தியாளர் இந்திகா ராமநாயக்கவிடம் குறித்த விசாரணைக் குழு விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

கொழும்பு வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹணவின் அறிவுறுத்தல் பிரகாரம் நேற்று காலை பொலிஸ் தலைமையகம் சென்ற ஊடகவியலாளர் இந்திகா ராமநாயக்கவிடம் விசேட அதிரடிப்படை முன்னெடுத்ததாக கூறப்படும் ஊடகவியலாளர் சந்திப்பின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைபெற்ற விடயங்கள், பேசப்பட்ட விபரங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது அதிரடிப்படை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேரா நடத்தியதாக கூறப்படும் ஊடகவியலாளர் சந்திப்பின் வீடியோ மற்றும் ஓடியோ ஆதாரங்களை ஊடகவியலாளர் இந்திகா ராமநாயக்க விசாரணைக் குழுவிடம் கையளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் நேரடி கட்டுப்பாட்டில் பூரண விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46