1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயை இழந்தது ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம்

Published By: J.G.Stephan

02 Apr, 2020 | 08:31 AM
image

(ஆர்.ராம்)


மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் சுமார் 1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தினை இழந்துள்ளதாக இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரெஹான் லக்கானி தெரிவிக்கையில், சீனாவில் ஊற்றெடுத்த கொரோனா வைரஸ் மேற்குலகத்தினையும் மோசமாக பாதித்துள்ளது. இதனால் இலங்கை ஆடை ஏற்றுமதித்துறையானது மிகுந்த பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளது.



குறிப்பாக மார்ச் முதல் எதிர்வரும் ஜூன் வரையில் எமக்கு வருமானமாக கிடைக்கவிருந்த 1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் முழுமையாக சீர்குலைந்துள்ளது.

இதனைவிடவும் தற்போதைய நிலையில் 200 முதல் 500பில்லின் அமெரிக்க டொலர்கள் வரையில் ஏற்றுமதிக்கான முற்கூட்டிய பதிவுகளும் கிடைக்காது போயுள்ளன என்றார்.

இதேவேளை, இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 40சதவீதம் ஆடை ஏற்றுமதி காணப்படுவதோடு வர்த்தக ஏற்றுமதியில் 52சதவீதமாகவும் உள்ளது. மேலும் ஆடை ஏற்றுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6சதவீத பங்களிப்பினை செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08