ஊரடங்கை மீறிய 8739 பேர் கைது : 2149 வாகனங்கள் பறிமுதல்

Published By: Vishnu

01 Apr, 2020 | 04:30 PM
image

(செ.தேன்மொழி)

ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பில் 12 நாட்களுக்குள் 8739 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2149 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன்,  மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு காலவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது. 

இவ்வாறு  எட்டு மணித்தியாலம் கால அவகாசம் வழங்கப்பட்டு மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு , கம்பஹா, களுத்துறை , கண்டி ,புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவிக்கும் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பகுதிகள் முற்றகாக முடக்கப்பட்டுள்ளன.

இக்காலகட்டத்தில் அதனை மீறும் வகையில் செயற்படுபவர்களை கைதுசெய்வதாக பொலிஸார் அறிவித்திருந்த போதும்  சிலர் அதனை கருத்திற் கொள்ளாது செயற்பட்டு வருகின்றனர். 

இவ்வாறு செயற்பட்ட பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இதேவேளை இவ்வாறு கைதுசெய்யப்படும் நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு கம்பஹா, களுத்துறை , கண்டி, புத்தளம் ஆகிய பகுதிகளைத் தவிர ஏனையப்பகுதிகளில் காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்ததுடன்,பிற்பகல் 12 மணிமுதல் மீண்டும் அமுல் படுத்தப்பட்டது.

அதற்கமைய  இன்று  காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரையான 6 மணித்தியாலயத்திற்குள் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டிருந்த ஆறு மாவட்டங்களில் மாத்திரம் 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 71 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு கடந்துள்ள 12 நாட்களுக்குள் மாத்திரம் 8739 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் , கார், முச்சக்கர வண்டி உள்ளிட்ட  2149 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்பதுடன், அதனை வைரஸ்  தொற்று கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னரே கையளிக்கப்படும். இதேவேளை பிரதான வீதிகள் மாத்திரமின்றி கிளை வீதிகளிலும் சோதனனகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58