மத்திய வங்கி அதிகாரிகளுடன் அவசர சந்திப்பை மேற்கொண்டார் ஜனாதிபதி

01 Apr, 2020 | 04:06 PM
image

கொவிட் 19 தொற்று பரவலுடன் உருவாகியுள்ள பொருளாதார நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று(31.03.2020) இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அதிகாரிகளை சந்தித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநர், பிரதி ஆளுநர்கள், வங்கி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு பொறுப்பான உதவி ஆளுநர் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பணிப்பாளர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கொவிட் 19 பரவலுக்கு மத்தியில் நிதி திரவத்தன்மையை பேணுதல் மற்றும் நிதி வசதிகளுக்கான ஏற்பாடுகள் குறித்த வழிநடத்தல் முகாமைத்துவத்திற்காக இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது.

அந்நியச் செலாவணி வரவுசெலவுத் திட்டம் மற்றும் வெளி கையிருப்பு முகாமைத்துவத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள் இலங்கையின் பிணைமுறிகளில் முதலீடு செய்வோரிடம் அதிகபட்ச நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வங்கி அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.

அனைத்து வங்கிகளையும் திறந்து வைக்குமாறு மத்திய வங்கிக்கு அறிவித்த ஜனாதிபதி அவர்கள், கொவிட் 19 பிரச்சினைக்கு பின்னரான காலத்திற்குறிய பொருளாதார மூலோபாயங்களை வகுக்குமாறும் பணிப்புரை வழங்கினார்.

திறைசேறி செயலாளரும் கலந்துரையாடலில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31