பெல்ஜியத்தில் 12 வயது சிறுமி பலி

31 Mar, 2020 | 09:38 PM
image

கொரோனா வைரஸ் காரணமாக பெல்ஜியத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அந்த நாட்டை துயரத்திலாழ்த்தியுள்ளது.

பெல்ஜியத்தின் சுகாதார அமைச்சின் பேச்சாளர் இதனை உறுதி செய்துள்ளார்.

12 வயது சிறுமி உயிரிழந்துள்ளதை தெரிவித்துள்ள பேச்சாளர் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரின் அந்தரங்கத்திற்கான உரிமையை மதிப்பதற்காக ஏனைய விடயங்களை தெரிவிக்க மறுத்துள்ளார்.

இந்த உயிரிழப்பு குறித்த அறிவித்தவேளை பெல்ஜியத்தின் அரச பேச்சாளர் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார்.

இது சிறுமியொருவரையும்,மருத்துவ மற்றும் விஞ்ஞான சமூகத்தினையும் பாதித்துள்ளது என்பதால் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் சிறுமியின் குடும்பத்தவர்களின் துயரங்களை எண்ணி வேதனையடைகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமிமூன்று நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பின்னர் அவரது நிலை மோசமடைந்தது என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து வயதினரும் பாதிக்கப்படலாம் என்பதை இது நினைவுபடுத்துகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இது வழமைக்கு மாறானது என்றபோதிலும் ஏன் இது இடம்பெறுகின்றது என்பது இதுவரை தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெல்ஜியத்தில் 24 மணிநேரத்தில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை பெல்ஜியத்தில் 705 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42
news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46