கொவிட் 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்புகள் 242 மில்லியனாக அதிகரிப்பு

Published By: J.G.Stephan

31 Mar, 2020 | 08:42 PM
image

(எம்.மனோசித்ரா)


நிறுவன மற்றும் தனிப்பட்ட ரீதியாக கிடைக்கும் அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்பு மீதி 242 மில்லியன் ரூபாவையும் கடந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, :


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் மார்ச் மாதம் 23 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. வங்கிக்கு நேரடியாக வைப்பிலிடப்பட்ட 9.5 மில்லியன் ரூபா மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தினால் செய்யப்பட்ட 5 லட்சம் ரூபா அன்பளிப்பு என்பவற்றுடன் இன்று முற்பகல் 8.00 மணிக்கு 145 மில்லியன் ரூபா நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டிருந்தது.



மக்கள் வங்கியின் நிதி முகாமைத்துவ கணக்குகள் திணைக்களம்  9.5 மில்லியன் ரூபா, மக்கள் வங்கி ஓய்வூதிய சங்கம் 03 மில்லியன் ரூபா, பீபல்ஸ் லீசிங், லிட்ரோ கேஸ் லங்கா லிமிடட், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை வங்கி என்பனவற்றின் தலா 5 மில்லியன் ரூபா, தேசிய சேமிப்பு வங்கி 8 மில்லியன் ரூபா மற்றும் அக்பர் பிரதர்ஸ் பிரைவற் லிமிடட் நிறுவனம் அன்பளிப்பு செய்த 50 மில்லியன் ரூபாவுடன் வைப்பு மீதி 242 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354354 என்ற இலக்கத்தின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ எகொடவெலேவுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02