ஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் வழங்கும் : இராணுவத்தளபதி அறிவிப்பு

Published By: J.G.Stephan

31 Mar, 2020 | 08:30 PM
image

(இரா.செல்வராஜா)


ஊரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் அரசாங்க ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்துகொடுக்கவுள்ளது.

இந்தத் தகவலை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



அரசாங்க ஊழியர்களுக்கு 2ஆம், 3ஆம் திகதிகளில் ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் ஓய்வூதியத்தை வங்கியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையை ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கியுள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு அதனைப் பெறுவதற்கு வசதியாகப் போக்குவரத்து வசதிகளைச் செய்துகொடுப்பதற்கு இராணுவம் தீர்மானித்துள்ளது.

ஓய்வூதியம் பெறும் ஒருவரை அவரது வீட்டிலிருந்து வங்கிக்கு அழைத்துக்கொண்டு, மீண்டும் வீட்டிற்குக் கொண்டுவந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு கிராமசேவகருடன் தொடர்பு கொள்ளுமாறு இராணுவம் ஓய்வூதியம் பெறுவோரைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21