தமிழகம் - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாகவே நிரந்தர தீர்வு காண முடியும் என்று மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார்.

யோகா என்பது மதம் சார்ந்த ஒரு விஷயம் கிடையாது. அது அறிவியல் ரீதியாக உடல் மற்றும் மனதுக்கு மிகவும் உகந்தது. இதை வெளிப்படுத்தும் விதமாக 2 ஆவது ஆண்டாக சர்வதேச யோகா தினத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது.

தமிழகம் - இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தமிழகம் மற்றும் இலங்கை மீனவர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாகவே நிரந்தர தீர்வு முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தென்சென்னை பா.ஜ.க. சார்பில் சென்னை பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் யோகா பயிற்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய வி.கே.சிங் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.