இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Published By: J.G.Stephan

31 Mar, 2020 | 03:37 PM
image

(நா.தனுஜா)


இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் சுகாதார அமைச்சு மற்றும் அதிகார சபைகளின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோன்று உரிய மருத்துவப் பொறிமுறைகளுக்கு அமைவாகவே பயணிகளைத் தொற்றுத்தடுப்புக் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் செயன்முறைகளும் முன்னெடுக்கப்பட்டன.



எனவே உறுதிசெய்யப்பட்டாத தவறான தகவல்களை சமூகவலைத்தளங்களின் பரப்புவதன் மூலம் மக்களைப் பிழையாக வழிநடத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும், தன்னலம் பாராது நாட்டுக்காக சேவையாற்றும் விமானநிலைய ஊழியர்களுக்கு மதிப்பளிக்குமாறும் விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

விமானநிலையம், விமானசேவைகள் நிறுவனம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் பிரிவினால் இன்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கண்காணிக்கும் செயற்பாடு தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல்வேறு தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

எனவே அதுகுறித்துத் தெளிவுபடுத்தவதற்கு விரும்புகின்றோம். நாம் மக்களுக்கான விமான சேவையை வழங்கும் நிறுவனம் என்ற வகையில் சேவையில் ஈடுபடும் அனைவருக்கும் உரிய சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், உரிய முன்னெச்சரிக்கை நடைமுறைகள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன. கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் முழு உலகையுமே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் நிலையில், ஒரு தேசிய இலக்கை முன்நிறுத்தி எமது ஊழியர்கள் அனைவரும் தமது உயிரைப் பணயம் வைத்து, ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் இலங்கையின் சுகாதார அதிகாரக் கட்டமைப்புக்களினால் வழங்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களின் பிரகாரம் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஈரான், இத்தாலி மற்றும் தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு வரும் விமானங்கள், அல்லது 14 நாட்களுக்கு முன்புவரை (மார்ச் 14 ஆம் திகதியிலிருந்து) அந்த நாடுகளுக்குப் பயணஞ் செய்திருந்தவர்கள் நாட்டிற்குள் நுழைவது கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து தடை செய்யப்பட்டது.கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியிலிருந்து பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளிலிருந்து விமானங்கள் இலங்கைக்கு வருகை தருவது மற்றும் மார்ச் 15 இலிருந்து 14 நாட்களுக்கு முன்னர் அந்நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர்கள் நாட்டிற்குள் நுழைவது இடைநிறுத்தப்பட்டது.

அதேவேளை மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து மார்ச் மாதம் 15 ஆம் திகதி காலை 11 மணி முதல் நள்ளிரவு 12 மணிக்குள் இலங்கைக்கு வருகை தந்த பயணிகள் அனைவரையும் தொற்றுத்தடுப்புக் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அதே தினத்தில் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் அனைத்து சர்வதேச விமான போக்குவரத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டன.

ஐக்கிய இராச்சியம், பெல்ஜியம் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளிலிருந்து புறப்படும் விமானங்கள் அல்லது அந்தநாடுகளுக்கு மார்ச் 16 ஆம் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாகப் பயணம் செய்தவர்கள் நாட்டிற்குள் நுழைவது மார்ச் 16 நள்ளிரவு 12 மணியிலிருந்து தடைசெய்யப்பட்டது. இந்நாடுகளில் இருந்து மார்ச் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் 16 ஆம் திகதி 12 மணிவரை நாட்டிற்கு வருகை தந்தவர்களைத் தொற்றுத்தடுப்புக் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த மார்ச் 17 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியிலிருந்து கட்டார், கனடா, பஹ்ரேனிலிருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதும், 17 ஆம் திகதிக்கு முன்னர் 14 நாட்கள் அந்நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் நாட்டிற்குள் நுழைவதும் தடைசெய்யப்பட்டது. இறுதியில் இலங்கைக்கான அனைத்து சர்வதேச பயணிகள் விமானசேவைகளும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி அதிகாலை 4 மணி தொடக்கம் 25 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை இடைநிறுத்தப்பட்டது. பின்னர் அது 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு, தற்போது ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் சுகாதார அமைச்சு மற்றும் அதிகாரசபைகளின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று உரிய மருத்துவப் பொறிமுறைகளுக்கு அமைவாகவே பயணிகளைத் தொற்றுத்தடுப்புக் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் செயன்முறைகளும் முன்னெடுக்கப்பட்டன. எனவே உறுதிசெய்யப்பட்டாத தவறான தகவல்களை சமூகவலைத்தளங்களின் பரப்புவதன் மூலம் மக்களைப் பிழையாக வழிநடத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும், தன்னலம் பாராது நாட்டுக்காக சேவையாற்றும் விமானநிலைய ஊழியர்களுக்கு மதிப்பளிக்குமாறும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58