நல்­லொ­ழுக்கம் மிக்க சமூகம் மற்றும் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்தும் அர­சாங்கம் என்ற கனவை யதார்த்­த­மாக்­கிக்­கொள்ள அஹிம்­சா­வாத கொள்­கை­யுடன் போரா­டிய பரி­சுத்­த­மான பௌத்­தரை எமது நாடு இழந்­துள்­ளது. எந்­தக்­கட்சி ஆட்­சி­யி­லி­ருந்­தாலும் ஜன­நா­ய­கத்­திற்கு களங்கம் ஏற்­ப­டும்­பட்­சத்தில் அதற்­கெ­தி­ராக மாது­லு­வாவே சோபித தேரர் குரல்­கொ­டுத்து தமது மேன்­மை­யான பங்­க­ளிப்பை முன்­னெ­டுத்து வந்தார் என பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

கோட்டே நாக விஹா­ரையின் விஹா­ரா­தி­ப­தியும் சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ள­ரு­மான மாது­லு­வாவே சோபித தேரரின் மறை­வை­யொட்டி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெளியிட்­டுள்ள அனு­தாபச் செய்­தி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்,


பிர­தமர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,


நல்­லொ­ழுக்கம் மிக்க சமூகம் மற்றும் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்தும் அர­சாங்கம் என்ற கனவை யதார்த்­த­மாக்­கிக்­கொள்ள அஹிம்­சா­வாத கொள்­கையுடன் போரா­டிய பரி­சுத்­த­மான பௌத்­தரை எமது நாடு இழந்­துள்­ளது. கோட்டே நாக விஹா­ரையின் விஹா­ரா­தி­ப­தியும் சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ள­ரு­மான மாது­லு­வாவே சோபித தேரரின் மறைவு நாட்டு மக்­க­ளுக்கும் மிகப்­பெ­ரிய இழப்பு.


1942 மே மாதம் 29 ஆம் திகதி பாதுக்கை மாது­லு­வாவ என்ற இடத்தில் பிறந்த இவர் வித்­தி­ய­ாலங்­கார, வித்­யோ­தய பல்­க­லைக்­க­ழ­கங்­களில் தமது பட்­டப்­ப­டிப்பை முடித்­துக்­கொண்டார். அன்றிலி­ருந்து அவர் மறைந்த காலம் வரையில் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லான நாட்டை உரு­வாக்கும் நோக்கில் அர­சாங்­கத்­து­டனும் மக்­க­ளு­டனும் ஒன்­றி­ணைந்து செயற்­பட்டார்.


எந்த கட்சி நாட்டை ஆட்சி செய்­தாலும் நாட்டில் ஜன­நா­ய­கத்­திற்கு களங்கம் ஏற்­ப­டுத்­தப்­படும் போது அச்­ச­மின்றி சோபித தேரர் குரல் கொடுத்தார். இதன் போது நாட்டின் நலனை மட்டும் கருத்­திற்­கொண்டு அவர் செயற்­பட்டார்.


சோபித தேரர் கூறி­யது போன்று ஒரு வலு­வான சமூக கட்­ட­மைப்பை உறுதிப் ­ப­டுத்­து­வது அரசாங்கத்தின் கடமை. அதற் காக இந்நாட்டு மக்களும் தமது பங்க ளிப்பை வழங்க வேண்டும். சோபித தேரரின் இழப்பை ஈடுசெய்ய முடியாத அதேவேளை அவரின் ஆத்மா சாந்திக்காகவும் பிரார்த் திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.