பப்பாசி மரம் வெட்டிய இரு சகோதரர்களில் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்

30 Mar, 2020 | 08:08 PM
image

மட்டக்களப்பு மண்டூரில், சகோதரர்கள் இருவர் பப்பாசி மரமொன்றை  வெட்ட முயற்சித்தபோது  ஒருவர் மீது மரம் வீழ்ந்ததில் பலத்தகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மண்டூர் பலாச்சோலைப் பிரதேசத்தில், கடந்த 25 ஆம் திகதி தமது வீட்டை அண்டிய பகுதியில் இருந்த 30 அடி உயரம் கொண்ட  பப்பாசிப் மரம் ஒன்றை வெட்டுவதற்கு 10 வயது சிறுவனும், 13 வயதுடைய அவருடைய சகோதரனும் முயன்றுள்ளனர். 

இதன் போது 13 வயது சகோதரன் அந்த மரத்தினை கயிற்றைக் கட்டி கீழே வீழ்த்த முயன்ற போது மற்றைய சிறுவன் கோடரியால் மரத்தை வெட்டியுள்ளார். 

இதன் போது மரம் சரிந்து  சிறுவன் மீது  வீழ்ந்ததையடுத்து சிறுவன்  தலையில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை  தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் நேற்று (29) இரவு சிகிச்சை பலனின்றி  குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர் .

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31