கட்டுப்பாட்டு விலையை மீறி மன்னாரில் மரக்கறிவகைகள் விற்பனை.- நுகர்வோர் விசனம் !

30 Mar, 2020 | 02:37 PM
image

மன்னாரில் இன்று (30)  காலை காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

எனினும் பொருள் கொள்வனவுக்காக மக்களின் வருகை குறைந்த அளவிலேயே காணப்பட்டது. 

அத்துடன் மன்னார் புதிய அரச பஸ் தரிப்பிட பகுதியில் மரக்கறி வகைகள் கட்டுப்பாட்டு விலையினை விட அதி கூடிய விலைக்கே விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் விசனம் தெரிவித்தனர்.

இதேவேளை மன்னார் நகரில் நிரந்தரமாக மரக்கறி வியாபரம் மேற்கொண்டு வருகின்ற மரக்கறி வியாபரிகளுக்கு ஊரடங்கு நேரத்தில் தம்புள்ளைக்குச் சென்று மரக்கறி வகைகளை பெற்று வருவதற்கான போக்குவரத்து வசதிகள் வழங்கப்படாமையும், மன்னாரில் மரக்கறி வியாபாரம் செய்யாத ஏனைய வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற வர்த்தகர்கள் பலருக்கு மரக்கறி வியாபாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும்  மரக்கரிவிலைகள் அதிகரிப்பதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னாரில் நிரந்தரமாக மரக்கறி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

மன்னார் மாவட்டத்தில் மீன் பிடி, விவசாயம், மற்றும் நாளாந்த கூலித் தொழில் ஈடுபட்டு வருபவர்களே அதிகமாக காணப்படுகின்ற நிலையில், ஊரடங்கு காரணமாக அவர்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் மற்றும் பலர் தமது நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று பொருட்களை கொள்வனவு செய்ததாகவும் தெரிவித்தனர்.

எனினும் இந் நிலை குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மரக்கறி வகைகள் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47