முஸ்லிம்கள் சட்டத்தை மதித்து செயற்படவேண்டும் -அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

29 Mar, 2020 | 08:50 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போதும் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் தென்படும்பட்சத்திலும் முஸ்லிம்கள் சட்டத்தை மதித்து செயற்படவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

பொலிஸ் தலைமையகம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் போது வீட்டைவிட்டு வெளியில் செல்வதை முற்றுமுழுதாகத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அத்தியவசிய பொருட்களை வீட்டுக்கு விநியோகம் செய்யும் முறையினூடாகப் பெற்றுக் கொள்ளல் அரசு அனுமதித்துள்ள நிறுவனங்களின் பெயர்பட்டியல் ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் போது வீட்டை விட்டு எவரும் வெளியில் செல்ல முடியாது. மிகவும் இக்கட்டான விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மாத்திரம் உரிய அனுமதியை  குறித்த பிரதேச பொலிஸ் நிலையத்தினூடாக பெற்றுக் கொண்ட பின்னரே வெளியில் சொல்ல முடியும். நிபந்தனைகளுடனே குறித்த அனுமதி வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் எம்மனைவரதும் நலனுக்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கி பொறுப்புணர்வுடன் அதனை முழுமையாக பின்பற்றி நடக்கவேண்டும். அதன் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் தற்காலிகமாக ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுகின்ற காலப்பகுதியில், அத்தியாவசிய பொருட்களை முடிந்தளவு வீட்டுக்கு விநியோகம் செய்யும்

முறையினூடாகப்  பெற்றுக் கொள்ளவேண்டும். முடியாதபோது பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் செல்லவேண்டும்.

சிறுவர்களும் வயோதிபர்களும் வெளியில் செல்வதைத் தவிர்த்து வாலிபர்களின் மூலம் வெளித் தேவைகளை பூர்த்தி செய்முயற்சிக்கவேண்டும். வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்துகொள்ளவேண்டும். வீடு திரும்பியவுடன் கைகளை கழுவி நன்றாக சுத்தம் செய்த பின் அல்லது குளித்து ஆடையை மாற்றிய பின் குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளவேண்டும்.

சுய தனிமைப்படுதலின் போது பேணப்பட வேண்டிய விடயங்கள்

கடந்த இரண்டு வாரங்களுக்குள் கொரோனா நோயாளி என்றுசந்தேகிக்கப்படும் ஒருவருடன் நேரடித் தொடர்பு வைத்துள்ளீரா? அப்படியாயின் நீர் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.

நோய் அறிகுறி சம்பந்தமாக அவதானத்துடன் இருக்கவேண்டும். வீட்டிலிருக்கும் ஏனையோரை விட்டும் பிரிந்திருந்து வீட்டிலேயே தரித்திருக்கவும். பிறருடன் நடமாடும் பொழுது ஆகக்குறைந்தது ஒரு மீற்றர் தூரத்தை பேணிக் கொள்ளவேண்டும்.

சுகாதாரமான பாதுகாப்பு முகக் கவசங்களை அணியவேண்டும். இறுமும் போதும் தும்மும் போதும் முகத்தை மூடிக் கொள்ளவும். எந்நேரமும் சவர்க்காரமிட்டு முழுமையாக கைகளைக் கழுவிக்கொள்ளவேண்டும். வீட்டில் பாவிக்கும் பொருட்களை ஏனையவர்களுடன் பரிமாறிக் கொள்வதைத் தவிர்க்கவும்.பாவிக்கும் பொருட்களை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

அத்துடன் பாவித்துவிட்டு ஒதுக்கும் பொருட்களை அழித்து விடவும். அகற்றக்கூடிய தட்டில் உணவுகளை எடுப்பதோடு தனிமைப்படுத்தப்பட்ட மலசல கூடம் மற்றும் குளியலறைகளை பயன்படுத்தவும். தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஆகக்குறைந்தது 14 நாட்களுக்கு இவ்விடயங்களை பின்பற்றவேண்டும்.

மேலும் இக்கால கட்டத்தில் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களான 0112-444480, 0112-444481, 1933 என்ற இலகங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

அத்துடன் ஆன்மீக விடயங்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏலவே கொடுத்துள்ள வழிகாட்டல்களை முஸ்லிம்கள் பின்பற்றி நடக்கவேண்டும். அதேபோன்று  மஸ்ஜித்களை மையப்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்போது அதற்கான அனுமதியை குறித்த பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ளவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36