ஓய்வூதியம் வழங்கும் திகதி அரசாங்கத்தால் அறிவிப்பு !

29 Mar, 2020 | 07:09 PM
image

(எம்.மனோசித்ரா)

ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவை தபால் மற்றும் வங்கி சேவைகள் ஊடாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தபால் சேவை மூலம் ஓய்வூதியத்தைப் பெறுபவர்களுக்கு வீடுகளுக்கே அவற்றைக் கொண்டு சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது :

ஏப்ரல் மாதம் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் ஓய்வூதியத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஓய்வூதிக் கொடுப்பனவு வழங்கப்படாதவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் திகதி எதிர்ப்பார்க்கப்படுகிறது. வழங்கப்படவுள்ள ஓய்வூதியக் கொடுப்பனவை தபால் அலுவலகத்திலும் குறித்த வங்கி கணக்குகளிலிருந்தும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தபால் சேவை மூலம் பெற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கு தபால் ஊழியர்கள் மூலம் நேரடியாக வீடுகளுக்கே கொண்டு சென்று கையளிப்பதற்கும் அல்லது கிராம சேவகர் ஊடாக கையளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்குகள் மூலம் பெற்றுக் கொள்பவர்களுக்கு ஏப்ரல் 2 அல்லது 3 ஆம் திகதி வைப்பிலிடப்படும். இவ்வாறு வங்கிகளிலிருந்து ஓய்வூதியத்தை பெறுபவர்களுக்கு ஊரடங்கின் போது பிரயாணம் செய்வதில் சிக்கல் ஏற்படும். எனவே அவ்வாறானவர்கள் கிராம சேவகரிடம் பயணம் செய்வதற்கான ஆவணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

குறித்த ஆவணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் குறித்த திகதிகளில் மாத்திரம் வங்கிகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர். கிராம சேவகருடன் தொடர்பு கொண்டு பொலிஸாருடன் முப்படையினரும் இணைந்து போக்குவரத்து ஏற்பாடுகளை முன்னெடுப்பர்.

இதற்காக ஒவ்வொரு வங்கியினதும் நகரத்திற்கு ஒரு கிளையேனும் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19