கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் என தம்மை அடையாளம் காட்டி கப்பம் பெற முற்பட்ட இருவரை களனி பிரதேச சட்ட அமுலாக்கல் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார்   கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் வத்தளை, டிக்கோவிட்ட கருவாடு உற்பத்தி நிலையமொன்றிற்கு சென்று தம்மை கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் என அடையாளப்படுத்தி 1 மில்லியன் ரூபா கப்பம் கோரியுள்ளனர்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களும் எலகந்த பகுதியிலுள்ள வாடி வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சந்தேக நபர்கள் இருவரும் வத்தளை, ஹெந்தலை பகுதியை சேர்ந்தவர்களெனவும், இருவரையும் வத்தளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.