கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான மருந்துகளை சீனாவிலிருந்து இறக்குமதிசெய்ய இலங்கை தீர்மானம்

Published By: Vishnu

29 Mar, 2020 | 05:26 PM
image

(ஆர்.யசி)

எதிர்வரும் இரு நாட்களுக்குள் "கொவிட் -19" எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான மருந்துகள் சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரவுள்ளதாக  அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது. 

அத்துடன் பொதுமக்களின் வீடுகளுக்கே மருந்துப்பொருட்கள் சென்றடையும் வகையிலான அரச மருந்தகங்களின் சேவையினை மேலும் ஆறுமாத காலத்திற்கு முன்னெடுக்கும் வேலைத்திட்டமொன்றை உருவாக்கியுள்ளதாகவும் கூறுகின்றது.

அரச மருந்தகங்கள் தவிர்ந்து ஏனைய அணைத்து மருந்தகங்களையும் உடனடியாக பூட்ட வேண்டும் என அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்த நிலையில் கடந்த இரு நாட்களாக அரச மருந்தகங்கள் பல மூடப்பட்ட நிலையில் இருந்தது. 

தமக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ள மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இது குறித்து அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளரிடம் வினவிய போதே அவர் இதனை கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் எண்ணூறு அரச மருந்தகங்கள் உள்ளன. இவை அனைத்துமே மக்களுக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திறந்துவைக்கப்பட்டுள்ள மருந்தகங்கள் என்ன என்பதை சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே மக்கள் சிரமங்கள் இல்லாது குறித்த மருந்தகங்களில் தமக்கு தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல் எவ்வாறு இங்கு மருந்துகளை பெற்றுக்கொள்வதென்றால், ஒவ்வொரு மருந்தகங்களிலும் அவர்களை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்கள் ஒட்டப்பட்டுள்ளது. 

"வட்சப், வைபர் " இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது. குறித்த இலக்கங்களுக்கு மக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளின் பெயர்களை  வைத்தியரின் மருந்துச்சீட்டு துண்டையோ அனுப்பி வைக்க வேண்டும்.

இதில் மக்களுக்கு தேவையான மருந்துகளை உரிய வீடுகளுக்கு அனுப்ப சில முறைகளும் கையாளப்படுகின்றது. தபால் நிலையங்களுக்கு வழங்கி அவற்றை தபால்க்காரர்கள் மூலமாக உரிய வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும், அதேபோல் சில மருந்தகங்களில் மருந்துகளை கொண்டுசென்று வழங்கும் ஊழியர்கள் உள்ளனர். அவர்களை கொண்டும் வழங்கப்படும். தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ள சிரமப்படும் நபர்கள் தமது கிராம சேவகரிடம் இதனை அறிவிக்க முடியும். 

இவ்வாறான மருத்துவ சேவை வெறுமனே ஒரு கிழமைக்கு  மாத்திரம் முன்னெடுக்க நாம் திட்டமிடவில்லை. குறைந்தது ஆறுமாத காலம் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நாம் தயார்நிலையில் உள்ளதாகவும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53