இங்கிலாந்தில் 2 ஆவது இலங்கையர் கொரோனாவுக்கு பலி ; வெளிநாடுகளில் 3 இலங்கையர்கள் உயிரிழப்பு

Published By: Priyatharshan

29 Mar, 2020 | 08:36 AM
image

இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற இலங்கை வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹென்றி ஜயவர்தன என்ற ஓய்வுபெற்ற வைத்தியர் ஆவார்.

இதேவேளை, நேற்றையதினம் லண்டனில் வசித்துவந்த இலங்கையரான மஹரகம பகுதியைச் சேர்ந்த 55 வயதான லக்‌ஷான் விஜேரத்ன என்பவர் லண்டனின் ஃபெல்தம் பகுதியில் உயிரிழந்தார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் வைரஸினால் பீடிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களில் இங்கிலாந்தில் மரணமடைந்த ஓய்வுபெற்ற வைத்தியருடன் சேர்த்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 ஆவது நபரின் மரணம் நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்தில் 2 மரணங்களும் சுவிற்சர்லாந்தில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவந்த இலங்கையர் ஒருவர் கடந்த வாரத்தில் உயிரிழந்ததை அடுத்து, கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் முதலாவது இலங்கைப் பிரஜையின் மரணம் பதிவாகியது.

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியிலிருந்து சுவிற்சர்லாந்திற்கு குடிபெயர்ந்த 59 வயதான நபரே இவ்வாறு கொரோனா வைரஸ் காரணமாக சுவிற்சர்லாந்தில் உயிரிழந்த முதலாவது இலங்கையர் ஆவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31