4000 கைதிகளை விடுவிக்கும் தீர்மானம் இன்றும் ஓரிரு தினங்களில் எடுக்கப்படும்

28 Mar, 2020 | 01:35 PM
image

(இரா.செல்வராஜா)

சிறுகுற்றங்களைப் புரிந்தவர்களையும், பிணை செலுத்த முடியாமல் சிறையிலிருக்கும் சுமார் 4000 கைதிகளை விடுதலை செய்வது குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சிறுகுற்றங்களை செய்தவர்களையும், பிணை செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்களையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை நியமிக்கவுள்ளார்.

அக்குழுவினர் பலமுறை கூறி ஆராய்ந்து சிறையிலுள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சிறைக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் சிபாரிசு செய்யவுள்ளனர்.

இதனடிப்படையில் சுமார் 4000 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். இவர்களில் 2000 பேர் ஒருவருடத்திற்குக் குறைவான சிறைத்தண்டனையை அனுபவிக்கும் சிறுகுற்றங்களைப் புரிந்தவர்கள். ஏனைய 2000 பேர் பிணை நிபந்தனையைப் பூர்த்தி செய்யமுடியாமல் இருப்பவர்கள்.

தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியினாலும் தவிர்க்க முடியாத காரணங்களினால் கைதிகளை விடுதலை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சிறைச்சாலை உயரதிகாரி தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08