ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதால், உணவு உற்பத்திகளை விநியோகிக்க நடவடிக்கை எடுங்கள்: பதில் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் ஆலோசனை

Published By: J.G.Stephan

28 Mar, 2020 | 12:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஊரடங்கு சட்டம் கடுமையாக அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய உணவு பொருட்கள், மரகறிகள், பழங்கள் மற்றும் தேங்காய் ஆகியவற்றை உற்பத்தி செய்பவர்கள் பொருள் விநியோகிப்பதற்கு போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுப்படுவதற்கான அனுமதி வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.



பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவலை அலட்சியமாக எண்ண முடியாது. குறுகிய காலத்தில் உலகளாவிய ரீதியில் பாரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான நடவடிக்கைகள் நாடு தழுவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பல காரணிகளை கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை இனி கடுமையாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் உற்பத்தி, மரகறிகள், பழங்கள் மற்றும் தேங்காய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் பொருள் விநியோகிக்க போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் எந்நிலையிலும் தடைகள் ஏற்பட கூடாது. அத்துடன் மக்களும் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05