பள்ளிவாசலில் தொழுகை நடாத்திய 18 பேர் பொலிஸாரால் கைது: பலர் தப்பியோட்டம் 

Published By: J.G.Stephan

27 Mar, 2020 | 09:58 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தற்போது நாட்டில் உள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் அரசாங்கம், ஜம் ஈய்யதுல் உலமா சபையின் அறிவுறுத்தல்களை மீறி ஹொரவபொத்தானை - கிவுலகட ஜும் ஆ பள்ளிவாசலில் ஜும் ஆ தொழுகையை நடாத்த ஒன்று கூடிய 18 பேரை இன்று ஹொரவபொத்தானை பொலிஸார் கைது செய்தனர்.



அங்கு ஒன்று கூடிய 50 இற்கும் மேற்பட்டோர் பொலிஸார் அவ்விடத்துக்கு செல்லும் போது தப்பிச் சென்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க  எனவும் ஹொரவபொத்தானை பொலிஸார் கூறினர்.
ஹொரவபொத்தானை - வவுனியா வீதியில் உள்ள கிவுலகட பகுதியில் அமைந்துள்ள ஜும் ஆ பள்ளிவாசலில் நூற்றுக் கணக்கானோர் ஜும் ஆ தொழுகைக்காக ஒன்று கூடியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்தே பொலிஸாரும் பிரதேசத்தின் சுகாதார அதிகாரிகளும் அங்கு சென்றுள்ளனர். ஹொரவபொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லக்மால் விஜேரத்ன, பிரதேச செயலாளர் ஆர்.செந்தில் உள்ளிட்டோர் அவ்வாறு அங்கு சென்ற குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.
பொலிஸார் அங்கு செல்லும் போதும் 70 பேருக்கும் அதிகமானோர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்களது பாதனிகள் பள்ளிவாசலில் இருந்ததை அவதானிக்க முடிந்ததாக பொலிசார் கூறினர்,
.
 ஹொரவபொத்தானை - கிவுலகட பகுதியில் இருந்து கேசரிக்கு கிடைத்த தகவல் பிரகாரம், அங்கு கூடிய குழுவினர் ஜும் ஆ தொழுகையை நடாத்த ஆலோசித்த போதே பொலிஸார் வந்ததாகவும், அவர்களால் ஜும் ஆ தொழுகையை முழுமையாக நடாத்த முடியாமல் போனதாகவும் அறிய முடிகின்றது.
 
எவ்வாறாயினும் ஊரடங்கு மற்றும் தொற்று நோய் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டங்களின் விதிகளை மீறி ஒன்று கூடல் இடம்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் பள்ளிவாசலில் இருந்த அப்பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் உள்ளிட்ட 18 பேரைக் கைது செய்து வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

அவர்களை பொலிஸார் பொலிஸ் பிணையில் விடுவித்த போதும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லக்மால் விஜேரத்ன, ஹொரவபொத்தானை பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் ஏ.எம்.சியாமை அவ்விடத்துக்கு வரவழைத்து கிவுலகட பள்ளிவாசலில் இனி மேல் அவ்வாறான ஒன்று கூடல்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளார்.

 தொடர் அறிவுறுத்தல்கள் ஜம் ஈய்யதுல் உலமா சபை உள்ளிட்ட முஸ்லும்  அமைப்புக்களால் அறிவித்தல் விடுத்தும் குறித்த ஒரு பள்ளிவாசல் அதனை கருத்திற் கொள்ளாமல் செயற்பட்டமை தொடர்பில் முஸ்லிம் அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.

இதனிடையே ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் மரணங்கள் சம்பவித்தால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிக்கையொன்றின் மூலம் தௌிவுபடுத்தியுள்ளது.

உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அதிகமானோர் ஒன்று கூட முடியாமையினால் வீடுகளில் இருந்தே துஆ செய்யுமாறும் உலமா சபை குறிப்பிட்டுள்ளது.

ஜனாஸா தொழுகைக்கு பொலிஸாரால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான மக்களை மாத்திரம் அழைத்துச்செல்ல வேண்டும் எனவும் ஜனாஸாவில் உறவினர்கள் ஒன்று சேரும் போது சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

தொழுகையின் போது தகுந்த காரணத்திற்காக இடைவௌி விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளமையினால், ஒருவர் மற்றவரில் இருந்து தள்ளி நிற்குமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்