அரசாங்கம் பொது மக்களிடம் விடுக்கும் கோரிக்கை

Published By: Vishnu

27 Mar, 2020 | 05:38 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் மிகவும் பாரதூரமான சுகாதார பிரச்சினையாக மாறியிருக்கும் தொற்று பரவுவதை தடுப்பதற்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

எனவே ஊரடங்கு சட்டத்தை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீட்டிலிருந்தே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் தடையின்றி வழங்களை மேற்கொள்ளவும், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதை முகாமைத்துவம் செய்வதற்கு பொறுப்பான செயலணி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் தனது விருப்பத்திற்கு அமைய எவரும் வீதிகளுக்கு வரக் கூடாது. செயலணியினால் அனுமதியளிக்கப்பட்டுள்ள வழங்கல் வாகனங்கள் மட்டும் வீதிகளில் பயணம் செய்ய முடியும். வேறு எந்த ஒரு வாகனமும் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமின்றி பயணம் செய்ய முடியாது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. 

எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகள், சிறு தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகள் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய மற்றும் துறைமுக சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 

ஊரடங்கு, கொரோனா, police curfew

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11
news-image

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட...

2024-03-28 09:46:04