ஏற்படவுள்ள உணவு பற்றாக்குறை சவாலை எதிர்க்கொள்ள விவசாயத்துறை அபிவிருத்தி செய்யப்படும் - பிரதமர்

Published By: Vishnu

27 Mar, 2020 | 05:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பூகோள ரீதியில்  எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படவுள்ள நிலையில் இந்த சவாலை எதிர்க் கொள்ள துரிதமாக விவசாயத்துறை அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் மக்கள் முடிந்தளவிற்கு வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

தற்போதைய உலக நடப்பின் பிரகாரம் எதிர்காலத்தில் பூகோள மட்டத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்த சவாலை வெற்றிக் கொள்ள வேண்டும்.விவசாயத்துறை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அனைத்து மட்டத்திலும் முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வீட்டில் இருக்கும் மக்கள் முடியான அளவிற்கு வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டும்.

தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விவசாய சேவை மத்திய நிலையத்தின் ஊடாக கிருமிநாசினிகள், உரமானியங்கள் வழங்கப்படும் .

அத்துடன் பிரதேச விவசாய அதிகாரிகள் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் .

நாடு தழுவிய ரீதியாக பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இலங்கை வாழ் அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02