எப்பாவெலை அரசாங்க பொஸ்பேட் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தானது திட்டமிட்ட செயலல்லவென அந்நிறுவனத்தின் தலைவர் உபாலி அனுராத திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைப் பிரிவின் முக்கிய ஆவணங்கள் சில அங்கிருந்தமையால் அவற்றை அழிக்கும் நோக்குடன் இந்த தீ ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என, பொய்யான தகவல்கள் பரவி வருவதாக, குறிப்பிட்ட உபாலி அனுராத திஸாநாயக்க, தான் அதனை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த தீயினால் பெருமளவு ஆவணங்கள் எரிந்து நாசமாகியுள்ள போதிலும் முக்கியமான ஆவணங்களின் நகல்கள் கொழும்பிலுள்ள பிரதான அலுவலகத்தில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.