கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலவுகிறது - சுகாதார பணிப்பகம்

Published By: Digital Desk 3

27 Mar, 2020 | 03:46 PM
image

(ஆர்.யசி)

கடந்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் கூட கொரோனா தொற்று குறித்த அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுவதாகவும், ஆகவே அடுத்த இரண்டு வாரங்களில் மிகக்கடுமையான சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகள் குறித்து வினவியபோதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜெயசிங்க இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு அதிகமான காலமாக நாம் மிகவும் கவனமாக கொரோனா தொற்றுப்பரவல் குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் வரையில் இலங்கையில் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட போதிலும் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக தொற்றாளர்களின்  எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. எனினும் நோய் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ள காரணத்தினால் கொரோனா வைரஸ் நோய் பரவல் குறைவடைந்துள்ளதாகவோ அல்லது முற்றாக தடுக்கப்பட்டுள்ளதாகவோ ஒருபோதும் கருத முடியாது.

இப்போது எவரும் அடையாளம் காணப்படாத போதிலும் கூட எரிமைலை ஒன்றின் மீது பயணிப்பது போன்றே இப்போதைய சூழ்நிலை அமைந்துள்ளது. எப்போது வெடித்து சிதறும் என எவரும் எதிர்பார்க்க முடியாத நிலைமையே உள்ளது. எனவே மக்கள் மிகவும் அவதானமாக தம்மை பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை கையாள வேண்டும், சுகாதாரத்துறை வழங்கும் ஆலோசனைகளை முழுமையாக பின்பற்றி செயற்பட வேண்டும். ஒரு சிலர் தூரநோக்கு சிந்தனையின்றி செயற்படுவது ஒட்டுமொத்த நாட்டினையும் பாதிக்கும். ஒவ்வொரு நபரும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

உலக நாடுகளில் இன்று இரண்டாம் கட்டமாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் இலங்கையிலும் நாம் முன்கூட்டிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது. ஆகவே சுகாதாரத்துறையினர் அடுத்த இரண்டு வாரங்களில் மிகவும் கடினமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அரசாங்கம் எமக்கான முழுமையான அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15