எப்பாவெலையில் அமைந்துள்ள அரசாங்க பொஸ்பேட் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பரவிய தீ காரணமாக, சுமார் 50 தொடக்கம் 60 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் உபாலி அனுராத திஸாநாயக்க தெரிவித்தார்.

குறித்த தீயினை அனுராதபுரம் மாநகர சபை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

தீயினால் குறித்த அலுவலகத்தின் வழங்கல் பிரிவு, கணக்காய்வு பிரிவு, ஆவண காப்பகங்கள் போன்றவற்றுக்கு  பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் கணனிகள், தளபாடங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. 

இந்நிலையில், இன்று மற்றும் நாளை இலங்கை அரச பொஸ்பரேட் நிறுவனத்திற்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு கெமராவினை ஆராய்ந்து தீயிற்கான காரணத்தை குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். 

அத்துடன், சேதமடைந்த அலுவலகத்தை புனரமைக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாகவும், புனரமைப்பு பணிகளுக்கு இரண்டு மாதங்கள் செல்லுமெனவும் தெரிவித்தார்.