சர்வதேச அளவில் உணவுப்பற்றாக்கு குறை ஏற்படலாம் ஐநா எச்சரிக்கை – காரணம் என்ன?

26 Mar, 2020 | 07:57 PM
image

கொரோனா வைரஸ் அச்சத்தினால்  உலக நாடுகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச அளவில் உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக  விவசாய தொழிலாளர்களிற்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் அரசாங்கங்கள் விதித்துள்ள வரிகள் ஏற்றுமதிக்கான தடைகள் காரணமாக எதிர்வரும் வாரங்களில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படலாம் என  ஐநாவின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் தலைமை பொருளியலாளர் மக்சிமோ டொரேரோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கங்கள் உணவுப்பொருட்கள்  தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்தால் மோசமான விடயங்கள் நிகழக்கூடும் என தெரிவித்துள்ள அவர் சுதந்திரவர்த்தகத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் எதிர்மறையானதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தடைகளிற்கான நேரமில்லை என குறிப்பிட்டுள்ள அவர் வர்த்தக தடைகளிற்குமான நேரம் இதுவல்ல இது சர்வதேச அளவில் உணவு விநியோகத்தை பாதுகாப்பதற்கான தருணம் என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துமாறு விடுக்கப்படும் வேண்டுகோள்களிற்கு அரசாங்கங்கள் செவிமடுக்க கூடாது என உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் தலைமை பொருளியலாளர் மக்சிமோ டொரேரோ தெரிவித்துள்ளார்.

உலகில் கோதுமை மாவை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தான் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது, உலகில் அதிக அளவு அரிசியை ஏற்றுமதி செய்யும் மூன்றாவது நாடான வியட்நாம் தனது ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது, உலகில் கோதுமையை அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடான ரஸ்யாவும் தடைகள் குறித்து எச்;சரித்துள்ளது.

இந்தநிலையில் வர்த்தக தடைகள் மிகமோசமான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் தலைமை பொருளியலாளர் மக்சிமோ டொரேரோ தெரிவித்துள்ளார்.

உணவுப்பொருட்கள் தொடர்பான நெருக்கடி அடுத்த சில வாரங்களில் ஆரம்பித்து அடுத்த சில மாதங்களில் தீவிரமடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52