நாவுல பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 25 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளது.

கலேவலை, அளுத்வெவ பகுதியில் வைத்து, சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட போத பஸ்ஸின் பின்னால் உள்ள டயரில் சிக்குண்டு  குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.