கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வாழும் கலை அமைப்பு ஆகியன ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று ஹட்டன் டன்பார் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதன்போது, யோகா பயிற்சிகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இராஜங்க கல்வி அமைச்சர் வே. இரதாகிருஷ்ணன், கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கடராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த யோகா பயிற்சியில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)