இடை நிறுத்தப்பட்டது சிவனொளிபாதமலை யாத்திரை

Published By: Digital Desk 3

25 Mar, 2020 | 03:29 PM
image

கடந்த இரண்டு வருடங்களாக சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சோதனை காலமாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் பூரணை தினத்தன்று ஆரம்பாமாகும் சிவனொளிபாதமலை யாத்திரைக்கான “பருவகாலம்” அடுத்த ஆண்டு மே மாதம் வருகின்ற வெசாக் பண்டிகையுடன் நிறைவு பெறும்.

இடைப்பட்ட ஆறு மாத காலத்துக்கு உள்நாட்டிலிருந்து இலட்சக் கணக்கான யாத்திரிகர்கள் வந்து போவது போல, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் ஆயிரக் கணக்கில் மலை உச்சிக்கு சென்று வந்து மகிழ்ச்சியோடு திரும்புவார்கள்.

அதேபோல் தான் கடந்த ஆண்டு சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பாமாகி யாத்திரிகர்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் கொழும்பில் உல்லாச ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களில் ஏப்பிரல் மாதம் 21 ஆம்  திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பின் காரணமாக சிவனொளிபாதமலை யாத்திரை மே மாதம் வெசாக் பண்டிகைக்கு முன்னரே நிறைவடைந்து வியாபாரம் செய்வதற்காக வெளியூர்களிலிந்து வர்த்தகம் செய்வதற்கு வருகை தந்திருந்தவர்களும், உள்ளூர் வியாபாரிகளும் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியிருந்தார்கள்.

அத்தகைய துர்ப்பாக்கிய நிலை இந்த ஆண்டும் உருவாகியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் “கொரோனா” வைரஸ் தொற்று காரணமாக இலங்கையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதால், இம்மாதம் (மார்ச்) 19 ஆந் திகதி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், சிவனொளிபாதமலை யாத்திரை உட்பட வணக்கஸ்தலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மஸ்கெலியாவில் உள்ள வங்கிகளின் ஊடாக கடன் உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இந்தக் கடனுக்கான தொகையை வாராந்தம் அறவிட்டு திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்.

அத்தோடு, நல்லதண்ணீர் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், தனியாருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் தொழிலாளர்களின் குடியிருப்புகளை அண்டிய இடங்கள் அனைத்தும் குத்தகைக்கு விடப்பட்டு வருவது வழக்கமாகும். இவற்றை குத்தகை அடிப்படையில் முன்கூட்டியே முழுப் பணத்தையும் செலுத்தி வாங்கிக் கொள்வார்கள்.

எனினும், இம்முறை மார்ச் மாதம் முதல் யாத்திரிகர் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, குத்தகைக்கு எடுத்துள்ள இடங்களுக்கான பணத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையும்   வியாபாரத்துக்காக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலையும், அவற்றைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையும் தோன்றியுள்ளது. எதிர்வரும் மே மாதம் வரை யாத்திரை தொடர்வதற்கான அறிகுறிகளும் தென்படாத நிலையே காணப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஏப்பிரல் மாதத்துடன் நிறைவடைந்த சிவனொளிபாதமலை யாத்திரைக்கான “பருவகாலம்” இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவு பெற்றுள்ளதாகவே கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வர்த்தகர்கள் கடன் சுமைக்கும், கஷ்டத்துக்கும் ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான “பருவகாலம்” எதிர்வரும் டிசம்பர் மாதம் பூரணை தினத்தன்று ஆர்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47