கபூலில் சீக்கிய மத வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கி தாரிகள் - படையினர் பரஸ்பர துப்பாக்கி சூடு 

Published By: Vishnu

25 Mar, 2020 | 01:25 PM
image

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய மத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கி ஏந்தியவர்களும் தற்கொலை குண்டுதாரிகளும் நுழைந்து கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளளனர்.

இவர்களுக்கு எதிரான பதில் தாக்குதல்களை தற்போது ஆப்கானிஸ்தான் படையினர் முன்னெடுத்து வருவதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பழைய காபூலில் அமைந்துள்ள குறித்த பகுதியை துப்பாக்கி தாரிகள் காலை 7.45 மணியளவில் சுற்றி வளைத்து பதில் தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவளை ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் நரேந்திரர் சிங் கல்சா கூறுகையில், இந்த மோதலில் மூன்று முதல் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 

அதே நேரத்தில் சுமார் 150 பொது மக்கள் வரை சீக்கிய வழிபாட்டுத் தலத்துக்குள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் முயற்சிகளை பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை, ஆனால் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் தலிபான்கள் சம்பந்தப்படவில்லை என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Photo Credit : Aljazeera

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52