இணையத்தளத்தில் மாணவர்களுக்கான இலவச கல்வி நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Published By: Digital Desk 3

26 Mar, 2020 | 05:04 PM
image

(எம்.மனோசித்ரா)

நடைமுறையில் உள்ள விடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயத்தின் ஊடாகவும் கட்டணமின்றி e –தக்ஸலா இணையதளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கல்வி அமைச்சினால் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க சகல தொலைபேசி நிறுவனங்களின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய http://www.e-thaksalawa.moe.gov.lk/ ஊடாக e-தக்ஸலாவ கற்றல் முகாமைத்துவ முறைமைக்குள் பிரவேசிக்க முடியும்.

e தக்ஸலாவில் பிரவேசிக்கும் அனைத்து பாடசாலை சிறார்களுக்கு பாட செயற்பாடுகள், வினாத்தாள்கள் மற்றும் பாடநூல் தொடர்பான பயிற்சிகள் உட்பட கற்றல் செயற்பாடுகளுக்கு வழிகாட்டியாக அதிகமான பாடதிட்டங்களுடன் ஒன்றிணைவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். தரம் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்காக உள்ளக செயற்பாட்டுடன் கூடிய பாடங்கள் மற்றும் மின்னணு உள்ளடக்கங்களும், தரம் 10-11 தொடர்பாக வீடியோ பாடங்களும் தரம் 1-13 தொடர்பாக பரீட்சை வினாதத்தாள்கள் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. (சா.தர) பரீட்சை மற்றும் க.பொ.த. (உ.தர) பரீட்சைக்குரிய கடந்த கால வினாத்தாள்கள், தரம் 1-13 வரை பாடம் சார்ந்த பொழுதுபோக்கான நிகழ்ச்சித் திட்டங்கள் , நூலகம், அகராதி மற்றும் பெருவாரியான வாசிப்பு கருவிகள் போன்றவை உள்ளடங்குகின்றன.

இந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நோயாளி இனங்காணப்பட்ட தருணத்திலேயே நாட்டின் சிறார்களின் முறையான பாதுகாப்பை கருத்திற்கொண்டு பாடசாலை விடுமுறையினை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரின் வழிகாட்டலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சரியான, மற்றும் காலத்திற்கேற்ற தீர்மானம் மிகவும் பயனுள்ளதாக அமைவது இந்த விடுமுறை காலத்தில் சிறார்களை கற்றலுக்காக ஊக்குவிப்பதாகும்  என்பதை கல்வி அமைச்சு வலியுறுத்துகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09