79 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 145 பேர் பூஸா தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில்  - கடற்படை

25 Mar, 2020 | 11:39 AM
image

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ்  பரவலை தடுப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகளுக்கமைய தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய கடற்படையினரால் பூஸா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கண்காணிப்பு நிலையத்தில் 145 பேர் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நான்கு மாடிகள் கொண்ட கட்டடத்தில் கடந்த 16 திகதி அமைக்கப்பட்ட இந்த மருத்துவ கண்காணிப்பு நிலையத்தில் 17 தேசிய கடல்வள பாதுகாப்பு அதிகாரிகள், 21 இலங்கையர்கள்  3 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 24 பேர் செவ்வாய்கிழமை உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை காலி துறைமுகப்பகுதியில் பாதுகாப்பு விடுதிகள் மூன்றில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 112 பேரும் வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய கடற்படையிரால் அமைக்கப்பட்டுள்ள பூஸா மருத்துவ கண்காணிப்பு நிலையத்திற்கு செவ்வாயன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 36 இலங்கையர்களும் 76 வெளிநாட்டவர்களும்  உள்ளடங்குகின்றனர். அத்தோடு சுய தனிமைப்படுத்தலை முன்னெடுத்திருந்த தேசிய கடல்வள பாதுகாப்பு அதிகாரிகள் 9 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இதற்கமைய கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள பூஸா தொற்று நீக்கல் மத்திய நிலையத்தில் 66 இலங்கையர்களும் 79 வெளிநாட்டவர்களும்  தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19