துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Published By: Digital Desk 3

25 Mar, 2020 | 10:59 AM
image

(செ.தேன்மொழி)

வீரகெட்டிய - வேகதவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேதகல பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கி சூட்டினால் படுகாயமடைந்திருந்த நபரை வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து அவர் மேலதிக சிகிச்சைக்காக தங்கல்ல வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வேகதவல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று காலை குறித்த நபரும் வேறு சிலருக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த துப்பாகி பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வீரகெட்டிய பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01