150 வருடங்கள் பழமையான சுங்க கட்டளைச் சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ள நிதி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

குறித்த சட்டமானது 1861 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளதோடு, இதுவரையில் அதில் 50 திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சுங்க கட்டளைச் சட்டங்களை நவீன தொழில்துறை வரவுகளுக்கு ஏற்ப மாற்றுவதன் மூலம் உலக சந்தையில் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சிறந்த நன்மைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சு  தெரிவித்துள்ளது.