நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் எமது சேவையை தடங்கலின்றி முன்னெடுக்க தயார் - பிறீமா நிறுவனம்

24 Mar, 2020 | 09:00 PM
image

கொரோனா எனப்படும் கொவிட்-19 தொற்று நாட்டில் வேகமாக பரவும் சூழலில், தேசத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தடங்கலின்றி தமது விநியோக சேவையை முன்னெடுப்பதற்கு தயார் நிலையிலுள்ளதாக பொது மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் பிறீமா சிலோன்  நிறுவனம் உறுதியளித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு கருதி மேலும் கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சூழ்நிலை எழுந்தாலும், தனது வீதி, புகையிரத வழி மற்றும் கடல் மார்க்கங்களில் அரசாங்கத்தின் ஆதரவுடன், மா விநியோகத்தை மேற்கொள்ளும் ஆற்றலை பிறீமா கொண்டுள்ளது.

இதனூடாக நாட்டின் மக்களுக்கு கோதுமை மா விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வது உறுதி செய்யப்படும் என்பதுடன், பாண் மற்றும் இதர வெதுப்பக தயாரிப்புகளில் ஈடுபடும் வெதுப்பக உரிமையாளர்களுக்கும் தமது உற்பத்தி செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

எனவே, இந்த நெருக்கடியான காலத்தில் நாட்டிற்குள் கோதுமை மாவுக்கு எவ்விதமான தட்டுப்பாடும் ஏற்படாது.

மேலும், தேசிய நுகர்வுக்கு 3 மாதங்களுக்கு போதுமானளவு முழுக் கோதுமையையும் நிறுவனம் பேணுகின்றது. சகல பிறீமா அலுவலகங்களிலும் உற்பத்தி பகுதிகளிலும் வைரஸ் பரவலை தடுப்பதற்கு அவசியமான சகல முற்காப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்புக்கான தனது அர்ப்பணிப்பை பிறீமா சிலோன் லிமிடெட் மீள உறுதி செய்துள்ளதுடன், இலங்கை மக்களுக்கு தினசரி நுகர்வுக்கு போதியளவு கோதுமை மா விநியோகத்தை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கத்துக்கு தமது முழு ஆதரவையும் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09