"கொரோனாவை அழிக்க ஒன்றுப்படுவோம்": கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் அழைப்பு

Published By: J.G.Stephan

24 Mar, 2020 | 08:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைய கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தற்போது செயற்பட்டு வருகின்றது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகளில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் இணைத்து ஒன்றுபட்டு சவால்களை வெற்றிக்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்தார்.

பிரதமர் தலைமையிலான அனைத்து கட்சித்தலைவர் கூட்டம் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

நாட்டுக்குள் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு எவ்வாறு இணைந்து செயற்படுவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் செயல்பாடுகள் வரவேற்புகுரியது, என்றும் தொடர்ந்து முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் கட்சித்தலைவர்கள் இதன் போது தெரிவித்தனர். அத்துடன் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை எவ்வாறு குறுகிய காலத்திற்குள் முன்னேற்றுவது என்பது தொடர்பிலும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டின் தற்போதைய சுகாதார மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கட்சித்தலைவர்கள் மத்தியில் தெளிவுப்படுத்தினார்.

சதோச உள்ளிட்ட வர்த்தக நிலையங்களின் ஊடாக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென பிரதமர் மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளைப் போன்று பொருளாதாரம் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கொரோனா தொற்றை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மக்கள் ஒன்றுக் கூடுவதை தவிர்ப்பதற்கு ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதுடன், அத்தியாவசிய தேவைகளற்ற அரச சேவைகளுககும் விடுமுறை வழங்க வேண்டுமென யோசனையை முன்வைத்தார்.

இதேவேளை, கொரோனா தொற்றை தடுப்பதற்கு முன்னெடுக்கும் செயற்பாடுகளைப் போன்று பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு முன்னாள் சபாநாயர் கரு ஜயசூரிய கோரிக்கையை முன்வைத்தார்.  இதனையடுத்து மக்களுக்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பதில் பொலிஸ்மா அதிபருக்கு பிரதமர் மகிந்தராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன் போது, பெரும்பாலான கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரிக்கை முன்வைத்த போதிலும், ஏனையோர் பாராளுமன்றத்தை கூட்டுவதை விட கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் இணைந்து கொரோனா தொற்றை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்து எனக் கூறியுள்ளனர்.

இந்த  கட்சித்தலைவர் கூட்டத்தில் முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், இராணுவ தளபதி, சுகாதார அமைச்சர் மற்றும் சிறப்பு வைத்தியர்கள் உள்ளிட்ட  பலர்  கலந்துக் கொண்டார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55