விமானசேவை ஊழியர்களை புறக்கணிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்  

Published By: Vishnu

24 Mar, 2020 | 02:15 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் நலனை முன்நிறுத்தி, தேசிய ரீதியான இலக்கொன்றுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை ஊழியர்களையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ புறக்கணிக்கும்  வகையில் அல்லது வருத்தும் விதமாக செயற்பட வேண்டாம் என்று அந்த விமானசேவைகள் நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலினால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானசேவையின் ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அண்மைக்காலங்களில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

அதுமாத்திரன்றி எயார்லைன்ஸ் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது ஹோட்டல்கள், பாடசாலை, வைத்தியசாலை போன்ற பொது இடங்களில் காட்டப்படுகின்ற வெறுப்பும், அச்சமும் மிகுந்த கவலையளிக்கிறது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் என்பது இலங்கையின் தேசிய விமானசேவை என்பதுடன், அத்தியாவசிய சேவையாகவும் பெயரிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக மிகப்பாரிய சுகாதார அச்சுறுத்தல் காணப்படுவதுடன், தனிப்பட்ட பாதுகாப்பும் ஆபத்திலுள்ள போதிலும் இது நாட்டுமக்களுக்கு அத்தியாவசியமான சேவையாகத் தொடர்கிறது.

கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகையே பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் நிலையிலும் கூட, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவையும், அதன் ஊழியர்களும் அனைத்துப் பயணிகள், கார்கோ நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய விமானசேவைகளை தினமும் 24 மணிநேரமும் வழங்கிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது பணியிலிருக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவையின் ஊழியர்கள் அனைவரும் நெருக்கடி மிக்க சூழ்நிலைகளில் பணியாற்றுவதற்கான பயிற்சியிலும் ஈடுபடுத்தப்படுவதுடன், சுயபாதுகாப்பு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்கள் மற்றும் விமானசேவை ஊழியர்களுக்கீன சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் அறிவுறுத்தல்களையும் சீராகப் பின்பற்றுகின்றார்கள்.

மேலும் அவர்களது உடல் மற்றும் உளநிலை குறித்து சீரான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அவர்களது குடும்பத்தாரின் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

எனவே தற்போது நாட்டின் நலனை முன்நிறுத்தி, தேசிய ரீதியான இலக்கொன்றுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை ஊழியர்களையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ புறக்கணிக்கும்  வகையில் அல்லது வருத்தும் விதமாக செயற்பட வேண்டாம் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26