சுகாதார சேவையாளர்கள் கொரோனா  வைரஸ் தொற்றுக்குள்ளாகுவதற்கான வாய்ப்பு அதிகம் - சுகாதார சேவைகள்  சங்கம்

24 Mar, 2020 | 12:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மற்றும். வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளில்  ஈடுப்படும் சுகாதார சேவையாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம், சுகாதார அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும். 

சுகாதார சேவையாளர்கள் இந்த  வைரஸ் தொற்றுக்குள்ளாகுவதற்கான வாய்ப்பு அதிகளவில்  காணப்படுகின்றது. ஆகவே  பொறுப்புள்ள அதிகாரிகள் உரிய  நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அகில இலங்கை  சுகாதார சேவைகள்  சங்கத்தின்   செயலாளர்  டெம்பிடியே  சுஹதானந்த தேரர் சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாயகத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.

  கொரோனா வைரஸ் இலங்கையில் முக்கிய பிரச்சினையாக  காணப்படுகின்றது. வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்கு  சுகாதார சேவையாளர்கள்  கடினமாக முன்னின்று செயற்படுகின்றார்கள். இந.த வைரஸ் சுகாதார சேவையாளர்களுக்கு தொற்றுவதற்கான   வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

சுகாதார சேவையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் பற்றாக்குறை நிலவுகின்றது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு  உரிய  கவனம் செலுத்த வேண்டும். தற்போது  நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பித்துள்ள வேளையில் சுகாதார சேவையாளர்கள் அரச வானகங்களில்  வரவழைக்கப்பட்டு சேவையில் ஈடுப்படுத்தப்படுத்தப்படுகின்றார்கள்.

  போக்குவரத்து  நடவடிக்கைகளின் போது அதிகளவான  பேர் ஒரே  தடவையில் வரவழைக்காமல் தனித்து அல்லது  குறைந்தபட்சமாக   வாகனங்களில் இடவசதிக்கு ஏற்ப  வரவழைக்கப்படுவது   பாதுகாப்பான வழிமுறையாக அமையும்.  சுகாதார சேவையாளர்களின் பாதுகாப்பு   குறித்து அரசாங்கம்  விசேட  கவனம் செலுத்த  வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49