பொகவந்தலாவை செல்வகந்த தோட்டத்தில் குடும்பஸ்த்தா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவா் நான்கு பிள்ளைகளின் தந்தையெனவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் மரண  விசாரணையின் பின் சட்டவைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.

சம்பவம் தொடா்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனா்.