கடந்த பத்து வருட ஆட்­சிக்­கா­லத்தின் போது சுமார் 20 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் சட்­ட­வி­ரோதமாக வெளி­நாட்டில் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது. இது புள்­ளி­வி­பர ரீதி­யாக நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் இது தொடர்­பி­லான பனாமா ஆவணம் விரைவில் வெளி­வரும் என மாந­கர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

இது தொடர்பில் நிதி குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினால் மாத்­திரம் விசா­ரணை செய்து கண்­டு­பி­டிக்க முடி­யாது. இதற்கு சர்­வ­தேச உத­வியும் மிக அவ­சி­ய­மாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார். முன்­னைய ஆட்சிக் காலத்தில் நிகழ்த்­தப்­பட்ட ஊழல் மோசடி மற்றும் தற்­போ­தைய பொரு­ளா­தார நிலைமை குறித்து அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க எழு­திய நூல் வெளி­யீட்டு விழா நேற்று இலங்கை மன்ற கல்­லூ­ரியில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க மேலும் உரை­யாற்­று­கையில்,

கடந்த பத்து வருட கால ஆட்­சியின் போது வீட்டு வரு­மா­னத்தில் இணைய வேண்­டிய நிதி சட்­ட­வி­ரோ­த­மான முறையில் வெளி­நா­டு­களுக்கு சென்­றுள்­ளது. இதன்­பி­ர­காரம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ 18 பில்­லியன் அமெ­ரிக்க டொலரை வெளி­நா­டு­களில் பதுக்கி வைத்­துள்­ள­தாக வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர குறிப்­பிட்­டி­ருந்தார்.

எனினும் அதனை மஹிந்த ராஜ­பக் ஷ நிரா­க­ரித்­தி­ருந்தார். ஆனாலும் முன்­னைய ஆட்­சியின் போது பொது­மக்­க­ளின் வரு­மா­னத்­துடன் சேர வேண்­டிய 20 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நாட்டில் மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ளது. 19 ஆயி­ரத்து 967 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் இவ்­வாறு சட்­ட­வி­ரோ­த­மாக பதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இது புள்­ளி­வி­பர ரீதி­யாக நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பி­லான பனாமா ஆவணம் விரைவில் வெளி­வரும். இது தொடர்பில் நிதி குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினால் மாத்­திரம் விசா­ரணை செய்து கண்­டு­பி­டிக்க முடி­யாது. இதற்கு சர்­வ­தேச உத­வியும் மிக அவ­சி­ய­மாகும். குற்றம் இழைத்­த­வர்கள் எவ­ரா­னாலும் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்.

தற்­போது நாட்டின் நிதி­யியல் துறை மீதான நம்­பிக்கை இழக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை மத்­திய வங்கி செயற்­பா­டு­களின் ஊடாக நிலைமை ஒப்­பு­விக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இதன் குற்­ற­வா­ளிகள் யார் என்­பது விசா­ரணையின் பின்பே தெரி­ய­வரும். அத்­துடன் நீதி­மன்ற கட்­ட­மைப்பில் சுயா­தீன தன்­மையை பார்க்­கிலும் நீதி நிலை­நாட்­டப்­ப­டு­வதே அவ­சி­ய­மாகும்.

அத்­துடன் தற்­போது பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் எமது அர­சாங்கம் தள்­ளப்­பட்­டுள்­ளது. இதி­லி­ருந்து மீளு­வ­தற்­கான நட­வ­டிக்கை துரி­த­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும்.

2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி ஏற்­ப­டுத்­தப்­பட்ட அமைதி புரட்சி வழி­யான மாற்­றத்தை நாம் மீளவும் நினைத்து பார்க்க வேண்டும். எமது அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பல­ருக்கு இது மறந்து விட்­டது. நாட்டின் ஆட்­சியை நிர்­ண­யிக்கும் பிர­தான பங்­கா­ளர்­க­ளாக 10 இலட்சம் மத்­திய தர வர்க்­கத்­தினர் உள்­ளனர்.

எனினும் முன்­னைய ஆட்­சியின் போது கோத்­தபாய ராஜ­பக்ஷ பஷில் ராஜ­பக்ஷ மற்றும் பி.பீ.ஜய­சுந்­தர ஆகியோர் மத்­திய தர வர்க்­கத்­தி­னரை மறந்து செயற்­பட்­டதன் விளை­வாக ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வியை தழு­வு­வ­தற்கு பிர­தான கார­ண­மாக அமைந்­தது. இதே­வேளை கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மக்­க­ளுக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்தோம். இதன்­படி நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக மாற்­றி­ய­மைத்தல்இ சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிறு­வுதல் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் போன்­ற­வைகள் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமை­கின்­றன.

தற்­போ­தைக்கு ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக மாற்­று­வ­தற்கு எம்மால் முடியாமல் போனது. 100 நாள் ஆட் சியின் போது பெரும்பான்மையற்ற நிலைமை காணப்பட்ட மையினால் பலதரப்பட்ட சட்டத்திட்டங்களை மாற்ற முடி யாமல் போனது. இருந்தபோதிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக மாற்று வதற்கு நான் இணக்கம் கிடையாது. எல்லைமீறி அதிகா ரங்களை நீக்கி செயற்படமுடியும். தற்போது ஜனாதிபதி முறைமை ஜனநாயக மயப்படுத்தப்பட்டுள்ளது என்­றார்.