சமுர்த்தி பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க ஏற்பாடு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Published By: Vishnu

23 Mar, 2020 | 07:34 PM
image

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து செல்வதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருப்பதால் நாளாந்தம் வருமானம் பெற்று தமது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வந்த பல குடும்பங்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் அவர்கள் தமது அத்தியாவசிய தேவைகளை குறைந்தளவேனும் நிவர்த்திசெய்து கொள்வதற்கான முன்னேற்பாடாக சமுர்த்தி பெறும் பயனாளிகளுக்கு முன்னேற்பாடாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதுடன் அதற்கான அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பித்துள்ளேன்.

அத்துடன் குறித்த கொடுப்பனவை கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக அகன்ற பின்னர் அதை அவர்களிடமிருந்து மீளப் பெறுவதா? அல்லது நிவாரணமாக வழங்குவதா என்பது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து அது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19